க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

0

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகின்றது.

இந்நிலையில் இதுவரை காலமும் விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்று விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் Online முறை மூலம் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk அல்லது onlineexams.gov.lk/eic அல்லது உத்தியோகபூர்வ கையடக்கத்தொலைபேசி செயலியான ´Exams Sri Lanka´ (Android | iOS) ஊடாக, அறிவுறுத்தல்களை பின்பற்றி இதற்காக விண்ணப்பிக்கலாம்.

மேலும் பாடசாலை பரீட்சார்த்திகள் தங்களின் விண்ணப்பங்களை அதிபர்கள் அறிவுறுத்தியவாறு சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply