உங்களுடைய வண்டி வாகனம் அடிக்கடி விபத்துக்குள்ளாகாமல் இருக்க.

0

பயணத்தின்போது விநாயகர் வழிபாட்டிற்கு எப்படி நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே போல ஹனுமன் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.

வீட்டிலிருந்து வெளியே 2 நாட்கள் அல்லது 3 நாட்கள் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது எனும் பட்சத்தில் ஒரு ஹனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு துளசி மாலை சாத்தி விட்டு, ஹனுமன் கழுத்தில் இருக்கும் ஒரு துளசியை வாங்கிய உங்களுடைய வண்டி வாகனத்தில் வைத்துவிட்டு அதன் பின்பு பயணம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

என்னதான் செய்தாலும் எங்களுடைய வண்டி வாகனம் அடிக்கடி பழுதடைந்து கொண்டே இருக்கின்றது.

என்னதான் செய்தாலும் வண்டி வாகனம் ஏதாவது ஒரு சூழ்நிலையில் விபத்தில் சிக்கி, வண்டி ஓட்டுபவர்களுக்கு, நடக்கும் விபத்தில் உடல் உறுப்புகள் இழப்பு கூட ஏற்படுகிறது என்று சொல்பவர்கள் ஒரு அம்மன் கோவிலுக்கு திரிசூலத்தை தானமாக கொடுக்க வேண்டும்.

ஒரே ஒரு முறை மனதார அம்மனிடம் வேண்டிக் கொண்டு இந்த திரிசூலத்தை கோவிலுக்கு, கோவிலில் இருக்கும் அம்பாளுக்கு தானம் செய்ய வேண்டும்.

அம்மன் கோவிலுக்கு திரிசூலத்தை தானமாக கொடுத்தால், உங்களுடைய வண்டி வாகனம் பழுதடையாமலும் விபத்துக்குள்ளாகாமல் இருக்கும். எந்த அம்மன் கோவிலுக்கு வேண்டுமென்றாலும் இந்த தானத்தை கொடுக்கலாம் அது நம்முடைய விருப்பம்.

உங்கள் வசதிக்கு ஏற்ப எந்த உலோகத்தில் வேண்டுமென்றாலும் இந்த திரிசூல தானம் செய்யலாம். அதுவும் அவரவருடைய விருப்பம் தான்.

குறிப்பாக டிராவல்ஸ் நடத்துபவர்கள் இந்த பரிகாரத்தை செய்வது அவர்களுக்கு நல்ல பலனை கொடுப்பதாக இருக்கும்.

நம்பிக்கை உள்ளவர்கள் மேற்சொன்ன பரிகாரங்களை நம்பிக்கையோடு செய்து பலனடையலாம்.

Leave a Reply