பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் வெளியான தகவல்.

0

பஸ் கட்டணத்தை அதிகரித்து, பயணிகளை சிரமத்துக்கு உள்ளாக்க அரசாங்கம் தயாராக இல்லை என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றையதினம் போக்குவரத்து, போக்குவரத்து ஒழுங்குபடுத்தல், பஸ் சேவைகள், ரயில்வே மற்றும் மோட்டார் தொழிற்றுறை அமைச்சுக்களின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் இடம்பெற்றது.

மேலும், போக்குவரத்துத் துறையில் காணப்படும் ஊழல் மற்றும் மோசடிகளைத் தடுத்து நிறுத்துவதன் மூலம், போக்குவரத்துச் சேவையில் தற்போது காணப்படும் சில பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியுமென்றும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Leave a Reply