மேல் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நீதிமன்ற விசாரணைகளை புறக்கணித்த குற்றச்சாட்டில் 707 பேரும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 1505 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த சுற்றிவளைப்புகள் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் ஆலோசனைக்கமைய நேற்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெற்றது.
இந்த சுற்றிவளைப்பின் போது நீதிமன்ற விசாரணைகளை புறக்கணித்த 707 பேரும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட 63 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மோசடி செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 616 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.



