மின்சாரத்திற்கான கேள்வியை எந்தவித தடையுமின்றி பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவு மின்சார உற்பத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.
நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதில் நுகர்வோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.



