அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் விடுத்துள்ள விசேட அறிக்கை.

0

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வதினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழர்களிடம் இருந்து பிடிக்கப்பட்ட படகுகளை ஏலம் விடும் பணியை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் இதுபோன்ற நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியது.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, ஏதோ ஒரு நோக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளை இலங்கைக் கடற்படை எடுக்கிறதோ என்ற எண்ணம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இலங்கையில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் மூழ்கியுள்ளதையடுத்து,

அங்குள்ள மக்கள் அதிக விலை கொடுத்து அரிசியை வாங்குகின்ற நிலையில், இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இலங்கை நாட்டிற்கு 3 லட்சம் டன் அரிசி விநியோகம் செய்ய இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குகிறது என்பது வேதனை அளிக்கும் செயலாகும்.

இந்தியா மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசுக்கு உதவி புரிகின்ற சூழ்நிலையில், இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படைத் தாக்குதல் நடத்துவது மனித நேயமற்ற செயல்.

எனவே, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், தமிழக மீனவர்கள் தங்களது மீன்பிடித்தொழிலை அச்சமின்றி மேற்கொள்ளவும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply