தென் கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்ட மைத்திரி.

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தென் கொரியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெறும் 2022 உலக சமாதான உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அவர் அங்கு விஜயம் மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கௌரவ விருந்தினராக 2022 ஆம் ஆண்டுக்கான உலக உச்சி மாநாட்டின் முக்கிய பேச்சாளராகவும் கலந்துகொள்ளவுள்ளார்.

மேலும் இன்று முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை தென்கொரியாவின் சியோல் நகரில் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply