மாத்தறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்.

0

மாத்தறை- தொட்டமுன பகுதியில் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 55 வயது மதிக்கத்தக்க பெண் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த சடலம் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது .

இந்த மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாத்தறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply