யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப்பகுதியில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில் மினி வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மோதி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



