நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய விசேட நிவாரண பொதி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 998 ரூபாவுக்கு இந்த விசேட நிவாரண பொதி வழங்கப்படுகின்றது.
அத்துடன் இந்த நிவாரண பொதியில், 400 கிராம் நூடில்ஸ், 100 கிராம் நெத்தலி கருவாடு, 5 கிலோகிராம் நாட்டரிசி, 100 கிராம் தேயிலை மற்றும் 100 கிராம் மஞ்சள் தூள் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ளாா்.
மேலும் நாட்டில் சதொச விற்பனை நிலையம் இல்லாத பிரதேசங்களிலுள்ள மக்கள் 1998 என்ற துரித இலக்கத்துக்கு அழைக்க முடியும் என்பதுடன், 48 மணி நேரத்தில் வீட்டுக்கே இந்த நிவாரண பொதி விநியோகிக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.



