ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த
குற்றச்சாட்டில் பெண்ணொருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
. இந்நிலையில் குறித்த பெண் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்றத்துடன் இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடமிருந்து 1 கிலோ 64 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கொஹுவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை வீதியில் உள்ள களுபோவில பிரதேசத்தில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர்.
மேலதிக விசாரணையில் சந்தேக நபரும் அவரது மனைவியும் மற்றொரு கடத்தல்காரருக்கு போதைப்பொருள் விநியோகம் செய்தது தெரியவந்துள்ளது.



