தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கின்றது.
இந்நிலையில் குறித்த தேர்தல் எதிர்வரும் 19-ம் தேதி நடக்க இருக்கிறது.
அதன் பின்னர் பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 30 தொடங்கிய நிலையில், பிப்ரவரி 4 ஆம் தேதி நிறைவடைந்தது.
வேட்பு மனுக்களை திரும்ப பெற நேற்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன் பிரகாரம் சென்னை மாநகராட்சியில் 2,670 பேர் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்த 3,456 பேரில், 633 பேர் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
அவ்வாறு 243 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் சென்னை மாநகராட்சியில் தற்போது 2,670 பேர் களத்தில் உள்ளனர்



