மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் வெளியான அதிரடி தகவல்.

0

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் மாதாந்த மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மூன்று வருடங்களுக்கு தனியார் துறையிடம் இருந்து 300 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய அரசாங்கம் முயல்வதாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தனியாரிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு 95 பில்லியன் ரூபாய் செலவாகும் எனவும் அரசாங்கம் பிரச்சினையை தீவிரப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

எனினும் தனியார் மின் உற்பத்தி நிலைய உரிமையாளர்களுடன் அரசாங்கம் ஒருபோதும் சாதகமான ஒப்பந்தங்களை மேற்கொள்ளாது என்று குறிப்பிட்டார்.

ஏப்ரலில் எதிர்பார்க்கப்படும் மழையின் மூலம் நீர்த்தேக்கங்களை நிரப்ப முடியும் என்று அரசாங்கம் கூறியதாக தெரிவித்தார்.

ஐஓசி நிறுவனம், நேற்று முன்தினம் நள்ளிரவுமுதல் பெற்றோலின் விலையை 7 ரூபாயாலும் டீசலில் விலையை 3 ரூபாயாலும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply