உயர்தர பரீட்சார்த்திகள் தொடர்பில் விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்.

0

இன்று முதல் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரிட்சைகள் ஆரம்பமாகின்றன.

இந்நிலையில் இந்தப் பரீட்சையானது எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் குறித்த பரீட்சார்த்திகள் அனைவரும் உரிய தேசிய அடையாள அட்டையுடன், 7:45 மணிக்கு பரீட்சை மண்டபத்திற்குள் பிரவேசிக்க வேண்டும்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2,437 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளது.

மேலும் குறித்த பரீட்சைக்கு 345,242 பரீட்சார்த்திகள் தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் தமது பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளையின் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் கொவிட் தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் பெற வெற்றிக்கு தொற்றுவதற்கான சகல ஏற்பாடுகளும் உரிய வகையில் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply