பூனை குறுக்கே போனால் என்ன ஆகும்..!!!

0

இன்றைய நவீன காலத்தில் மக்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் உள்ளன.

லைட் வசதிகள், மின்சார தட்டுப்பாடு இல்லாத நிலை, வெளியில் செல்வதற்கு உடனே பேருந்து சேவைகள் போன்ற அனைத்து வசதிகளும் இருக்கிறது.

ஆனால் அன்றைய பழங்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கோ தெருக்களில் லைட் இல்லாமல் விளக்குகளை வைத்தும், அவசரமாக வெளியில் செல்ல குதிரை வண்டியிலும், மாட்டு வண்டியிலும் தான் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போதெல்லாம் இரவு நேரம் பயணம் தான் பெரும்பாலும் மேற்கொள்வார்கள்.

இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது எதிரில் வரக்கூடிய பூனை மாட்டு வண்டியோ அல்லது குதிரை வண்டியோ ஓட்டி செல்பவர்களுடைய கண்களுக்கு தெரியாது.

நமக்கு எதிரில் வருவது பூனை தான் என்று வண்டியில் இருக்கக்கூடிய மாடு மற்றும் குதிரைகளுக்கு தெரியாது.

இருட்டில் பூனைகளின் கண்களை பார்த்து மாடு மற்றும் குதிரை பயந்துவிட கூடாது என்பதற்காக வண்டியை ஓட்டுபவர்கள் பூனை எதிரே வந்தால், சிறிது நேரம் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, குதிரைக்கும் மாட்டிற்கும் தண்ணீர் காட்டிவிட்டு, சிறிது நேரம் அவர்களும் ஓய்வெடுத்து விட்டு செல்வார்களாம்.

இந்த பழக்கம் தான் காலப்போக்கில் அப்படியே மாற்றம் அடைந்து பூனை குறுக்கே வந்தால் அபசகுனம்.

நல்ல காரியத்திற்கோ அல்லது வெளியில் செல்லும் போதோ பூனை குறுக்கில் வந்தால் தண்ணீர் குடித்துவிட்டு சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்று நம்முடைய பெருமக்கள் மாற்றி வைத்துவிட்டார்கள்.

இனிமேலும் உங்களுடைய வாழ்க்கையில் பூனை குறுக்கே வந்தால் இந்து அபசகுனம் என்று நினைக்காமல் மனதை குழப்ப நிலையிலிருந்து தள்ளிப்போடுங்கள். பூனை குறுக்கே வந்தாலும் சரி, குறுக்கே வராவிட்டாலும் சரி எந்த காரியத்தையும் தொடங்கும் முன் வெற்றியுடன் முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு செயலை தொடங்குங்கள். வெற்றி உங்களுக்கே
0000000000

Leave a Reply