இலங்கையில் குவிக்கப்பட்டுள்ள காவற்துறையினர்.

0

இலங்கையின் 74வது சுதந்திர தினம் இன்றாகும்.

இந்நிலையில் குறித்த கொண்டாட்டத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காவற்துறையினர் விசேட சோதனை நடவடிக்கைகளிலும்,ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இன்றை தினம் இடம்பெறவுள்ள 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் பாதுகாப்பிற்காக 3000 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காவற்துறையினர் , விசேட அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினரின் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு கொழும்பு மாநகரம் மற்றும் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்பு திட்டமொன்றும் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply