ஒரு கைப்பிடி சோம்பு இருந்தால் போதும்.

0

ஒரே ஒரு கைப்பிடி சோம்பை பயன்படுத்துவதன் மூலம் நமக்கு எதுவும் நஷ்டமாக போவது கிடையாது. ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள்.

அதில் ஒரு கைப்பிடி அளவு சோப்பைப் போட்டுக் கொள்ளுங்கள்.

கண்ணாடிப் பாட்டிலின் வாய்ப் பகுதியில் உங்கள் வாயை கிட்ட கொண்டு போய், அல்லது உங்கள் வாய் கிட்ட கண்ணாடி பாட்டிலை கொண்டு வந்து, உங்களுடைய லட்சியம், நீங்கள் என்ன காரியத்தை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அதை ஒரு வரியில் அந்த பாட்டிலுக்குள் இருக்கும் சோம்பில் சொல்லிவிடுங்கள்.

பாட்டிலுக்குள் சொன்ன விஷயத்தை ஒரு வெள்ளைக் காகிதத்தில் எழுதி சுருட்டி அந்த பாட்டிலுக்குள் இருக்கும் சோம்பில் புதைத்து, பாட்டிலின் மூடி அப்படியே வைத்து விடுங்கள்.

உங்கள் வீட்டின் எந்த அலமாரியில் வேண்டுமென்றாலும் இந்த பாட்டிலை வைத்து கொள்ளலாம்.

நீங்கள் ரிலாக்சாக வீட்டில் இருக்கும்போது இந்த பாட்டிலை எடுத்து பாட்டிலின் மூடியை திறந்து மீண்டும் உங்களுடைய அதே கோரிக்கையை அந்த சோம்பிடம் சொல்ல வேண்டும்.

இப்படி தொடர்ந்து இந்த சோம்பு பரிகாரத்தை செய்து வருவதன் மூலம் உங்களுடைய குறிக்கோள் சீக்கிரமே நிறைவேறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.

இப்படி இத்தனை நாட்கள் தான் இந்த பரிகாரத்தை செய்யவேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது.

உங்கள் இலக்கு நிறைவேறும் வரை இந்த பரிகாரத்தை செய்யலாம். 6 மாதத்திற்கு ஒருமுறை பழைய சோம்பை மட்டும் கால் படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் புதிய சோம்பு மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

(பரிகாரத்தை செய்யும் போது இடையில் இந்த பரிகார செய்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் பரிகாரத்தை அந்த நிமிடம் நிறுத்திக்கொள்ளுங்கள்.

அதில் எந்த தவறும் கிடையாது. நம்பிக்கை இல்லாமல் மட்டும் பரிகாரத்தை தொடர வேண்டாம்.)

நிறைய பேருக்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று குறிக்கோள் இருக்கும். ஒரு வருடத்திற்குள் இவ்வளவு தொகையை சேர்ந்தே ஆகவேண்டும். வீடு கட்ட வேண்டும்.

நிலம் வாங்க வேண்டும். வண்டி வாங்க வேண்டும். என்ற கனவு இருந்தால் கூட இந்த பரிகாரத்தின் மூலம் நல்ல பலனை பெற முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.

நிச்சயம் நல்லது நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Leave a Reply