போதுமென்ற அளவிற்கு பண மழை பொழிய வியாழக்கிழமை தோறும் செய்ய வேண்டிய குபேர லட்சுமி பூஜை மற்றும் மந்திரம்.

0

நமது வீட்டிற்குள் வரும் மகாலட்சுமி தேவியின் எண்ணம் நமது வீட்டைவிட்டு போகாதபடி எப்பொழுதும் இந்த குபேர பூஜையை தொடர்ந்து செய்ய வேண்டும்.

அவ்வாறு 5 என்பது குபேரருக்கு உரிய எண்ணாகும்.

எனவே தான் அனைத்து நாடுகளிலும் ஐந்து ரூபாய் மட்டும் பச்சை நிறத்தில் இருக்கும். பச்சை நிறம் என்பதும் குபேரருக்கு மிகவும் உரித்தானதாகும்.

அதுபோல குபேரனின் வாகனம் கீரியாகும். பணம் இருக்கும் இடத்தில்தான் பிணியும் வந்து சேரும்.

எனவேதான் பாம்பின் விஷத்தை முறிக்க வல்ல திரியை வாகனமாக வைத்துள்ளார் குபேரர்.

எனவே குபேரனை வணங்கும் பொழுது நோய் நொடியற்ற செல்வம் வேண்டும் என கேட்க வேண்டும்.

இவ்வாறு குபேரலட்சுமியை சேர்ந்து வணங்கும் பொழுது அளவற்ற செல்வமும், அதிர்ஷ்டமும் வந்தடைகிறது.

இவ்வாறு வியாழக்கிழமை தோறும் இந்த பூஜையை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் செய்ய வேண்டும்.

வாரம் ஒரு முறை இந்த பூஜையை தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் மட்டும்தான் அதிருஷ்டசாலியாக இருப்பீர்கள்.

அந்த அளவிற்கு இந்த பூஜை உங்களுக்கு நல்ல பலனை தரக் கூடியதாக இருக்கும். இதற்காக முதலில் உங்கள் வீட்டு நிலை வாசலில் வலதுபுறம், வடக்கு திசை நோக்கி, மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்த குபேர விளக்கை வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அந்த விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, ஐந்து கற்கண்டுளை சேர்த்து, திரி போட்டுத் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

பிறகு அவளுடன் சிறிதளவு பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.

ஏனென்றால் குபேரருக்கு மிகவும் பிடித்த உணவு அவல் ஆகும். அவரது பற்கள் மிகவும் மென்மையானதாக இருப்பதால் அவர் அவலை மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்.

இவ்வாறு தீபம் ஏற்றி குபேர லட்சுமி ஸ்லோகம் சொல்ல வேண்டும். “ஸ்ரீ குபேர லட்சுமி போற்றி” என உங்களால் முடிந்த வரை எத்தனை எண்ணிக்கையில் வேண்டுமானாலும் சொல்லலாம்.

Leave a Reply