
உலகில் எந்த ஒன்றும் அழிவதில்லை. அதேபோன்று, ஏற்கனவே இல்லாத ஒன்றை புதிதாக சிருஷ்டிக்கவும் இயலாது. எப்போதும் உள்ள ஒன்று காலத்தின் விதிகளுக்கு ஏற்ப, உருவத்திலும், உள்ளடக்கத்திலும் உருமாறிக் கொண்டிருக்கிறது. நீங்கள் இந்த தினத்தில் சந்திரனையும், சூரியனையும் பார்க்கிறீர்கள், காலத்தின் கட்டளையால் அவைகள் மறைகின்றன. பின் மீண்டும் மறுநாள் தோன்றுகின்றன. உறிந்து புராணங்களில் மறு – உயிர்த்தல், மறு பிறப்பு பற்றிய இந்தக்கோட்பாட்டிற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன.
மனிதன் இப்பிறவியில் செய்யும், பாவ புண்ணியத்திற்கேற்ப அவனின் மறுபிறப்பு நிர்ணயிக்கப்படுகின்றது. இந்தப் பிறவியில் அவன் செய்யும் புண்ணிய காரியங்கள், அடுத்த பிறவியில் அதிர்ஷ்டமான ஜாதகம் அமையுமாறு ஒரு கணத்தில் அவனை பிறக்கவைக்கிறது. மறுபிறவியில் இந்தப் பூமியில் வாழும் அவன் வாழ்வு சந்தோஷங்களால் நிறைவடையும். மாறாக பாவ காரியங்களை செய்தவனின் அடுத்த பிறவி வாழ்வு, அதற்கான சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியதாக அமைந்துவிடும்.
பிறக்கும் அந்தக் கணத்திலேயே, கிரகங்கள் அவன் வாழ்வையும், எதிர்காலத்தையும் தீர்மானித்து விடுகின்றன என்பதை ஜோதிட சாஸ்திரக் கோட்பாடுகள் நிச்சயிக்கின்றன. ஆகவே ஜோதிட சாஸ்திரம், ஒருவன் பிறக்கும் போது இருக்கும் கிரக நிலைகளைக் கொண்டு வாழ்வின் நிலைகளை அனுமானிக்கும் சாத்தியப்பாடுகள் உடையதாய் இருக்கிறது.

குழந்தை தாயின் கருவறையிலிருந்து வெளிவந்து, தரையைத் தொடும் போது கிரகங்களின், நட்சத்திரங்களின் தாக்கம் பெற்று, அதுமுதல் அதன் எதிர்காலத்தை இவைகளே வடிவமைக்கின்றன. ஜாதகம் என்று நாம் பொதுவாக குறிப்பிடுவது என்னவெனில், குழந்தை பிறப்பின் போதான கிரகநிலைகளைப் பற்றிய தெளிவான வாசிப்பாகும். மேலும் இந்த கிரகங்களை குழந்தையின் வாழ்க்கையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சரியாக கணித்தல் என்பதே ஜாதகத்தின் விசேஷம்.
இருண்ட அறையை, சிறு ஜோதி வெளிக்காட்டுவது போல், ஜோதிடம் / ஜாதகம் ஒருவனின் வாழ்க்கையில் தெரியாத ஒன்றை அவனுக்கு புரிய வைக்க உதவுவது.
சரியான நேரம், சரியான இடம் இவற்றைக் கொண்டு குறிக்கப்பட்ட ஒருவனின் ஜாதகம், அவனின் வாழ்க்கையையும், விதிகளையும், மிகச் சரியாகவே கணிக்கும். – Source: tamil.webdunia
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.
