இவரிடம் மட்டும் தான் செல்போன் நம்பர் கேட்கனும்னு தோணுச்சி..! வெட்கத்தில் பிரபல நடிகை..!

0

முட்ட கண்ணு, பியூட்டிபுள் நோஸ், பப்ளியான உதடு…இளைஞர்களை தன் எதிர்கால மனைவி இப்படி இருக்கனும் என்று கூற வைத்துள்ள நிவேதா பெத்துராஜ், இவரது பக்கத்து வீட்டு பெண் போன்ற பரிச்சயமான தோற்றம் திரையில் ரசிக்கவைக்கும். இவர் நடிகை மட்டும் இல்லாமல் ஓவியர், தற்காப்புக் கலைஞர், உடற் பயிற்சியாளர் என பலரை உள்ளடக்கியவர்.

இவரின் உலகில் காதலுக்கு என்ன ரோல் என்று அவரிடம் கேட்டதற்கு,

‘காதலா… அதை ஏன் கேட்கிறீர்கள். 8ஆவது படிக்கும் போது ஆரம்பிச்சது. அப்போவே கிரீடிங் கார்டில் ரோஜாப் பூ வைத்து ப்ரோபோசல் செய்தான். அப்போலாம் பசங்கனாலே பயம். அந்த கார்டில் என்ன எழுதியிருந்தது என்று கூட தெரியாது… தூக்கிப்போட்டுட்டு ஓடிட்டேன். அன்று நடந்ததை நினைத்துப் பார்த்தால் இப்போ சிரிப்பா வருது.

அதுக்கப்புறம், வெவ்வேறு காலகட்டத்தில் எக்கச்சக்க ப்ரோபோசல். அதுவும் துபாய் பசங்க இந்த விசயத்தில் ரொம்ப மோசம்… ரோட்டில் போகும் போது பார்த்து பிடிச்சுட்டா போதும், எப்படியாச்சும் நம்பர் வாங்கிடுவாங்க. இல்லைன அவங்க நம்பரை கொடுத்துடுவாங்க…

யார்கிட்டயும் இது வரை நம்பர் கொடுத்ததில்லை… ஆனால் ஒருதர் கிட்ட மட்டும் நம்பர் வாங்கனும்னு தோனுச்சு… நம்பர் வாங்குனேன்னே தவிர யூஸ் பண்ணவே இல்லை… தூக்கிப்போட்டுட்டேன்.

அதுலாம் ஒரு காலம்… கடைசியா எனக்கு பிரோபோசல் வந்து இரண்டு வருஷம் ஆச்சு’ என நகைத்தப்படி நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார். – Source:tamil.eenaduindia


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

Leave a Reply