தலையை நன்கு பின்னிக் கொண்டு அதில் உங்களுக்கு விருப்பமான பூக்களை வைத்துக் கொள்வதன் மூலம் நோய்களும் நீங்கும் என்கிறது ஆன்மீகம்.
தலையில் தினமும் ரோஜாப் பூ வைத்துக் கொண்டால் அடிக்கடி தலைசுற்றல் வராமல் பாதுகாக்கலாம்.
ரோஜா பூவில் இருக்கும் வாசம் தலை பாரத்தை குறைத்து தலைசுற்றலை நீக்குகிறது.
மேலும் கண் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணமாக்கும்.
தலை நிறைய மல்லிப்பூ வைத்துக் கொண்டிருந்தால் பெண்களுக்கு மன அமைதி கிடைக்கும்.
ஒரு சில பெண்களுக்கு மல்லிகை பூ வைத்தால் தலை சுற்றும் என்று கூறுவார்கள்.
அதன் அதிகப்படியான வாசம் பல பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.
மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளையும் உண்டு பண்ணுகின்றன.
ஆனால் தலை நிறைய மல்லிப் பூ வைத்துக் கொள்பவர்களுக்கு மன உளைச்சலில் இருந்து விடுதலை கிடைக்கிறது.
கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து கண் நோய்களை நீக்குகிறது.
மேலும் செண்பகப்பூ தலையில் வைத்துக் கொண்டால் பார்வை கூர்மை உண்டாகும்.
அது போல உடல் சோர்வை நீக்க தாழம்பூ வைத்துக் கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும்.
தாழம்பூ நல்ல வாசம் தருவதோடு மட்டுமல்லாமல், நம்மை உற்சாகத்துடன் வைத்துக் கொள்ளவும் உதவும்.
தாமரை பூவை சூடி கொள்பவர்களுக்கு மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி விடுமாம்.
அடிக்கடி தாமரை மலரை சூடிக் கொண்டால் மன இறுக்கம் தளர்ந்து ஒருவித புத்துணர்ச்சி அடையலாம். கிராமத்து பெண்கள் அதிகம் கனகாம்பரப் பூவை விரும்புகின்றனர்.
இந்த கனகாம்பரம் பூவை அடிக்கடி வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு தலைவலியே வருவதில்லையாம்.
இந்த அளவிற்கு பல்வேறு மருத்துவ பலன்களைக் கொடுக்கக் கூடிய பூச்சூடல் எனும் முறையை மறந்துவிடாமல் தொடர்ந்து பெண்கள் கடைப்பிடித்து வருவது மிகவும் நல்லது.
