ரேக்ளாவில் களமிறங்கியிருக்கும் பிரபுதேவா.

0

வால்டர் திரைப்படத்தின் இயக்குனர் அன்பு அடுத்ததாக நடிகர் பிரபுதேவா நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

பிரபுதேவாவின் 58வது திரைப்படப்படமான இந்த படத்தை ஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரிக்கின்றார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த திரைப்படத்துக்கு இசை அமைக்கிறார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் ஆர்யா இந்த படத்தின் டைட்டிலை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு “ரேக்ளா” என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் ரேக்ளா திரைப்படத்திற்கான பிற நடிகர்கள் மற்றும் படக்குழுவிற்கானதேர்வு நடைபெற்று வருகின்றது.

விரைவில் படம் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் பிரபுதேவா தற்போது “பஹீரா” திரைப்படத்தில் நடித்து முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply