2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் பரீட்சார்த்திகளுக்காக பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இந்நிலையில் தனியார் பரீட்சார்த்திகளுக்கு இதுவரையில் விண்ணப்பப்படிவம் கிடைக்காவிடின், www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
திட்டமிட்டபடி எதிர்வரும் 7ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ள நிலையில், இம்முறை நாடளாவிய ரீதியில் 345,242 பரீட்சார்த்திகள் உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளனர்.
அத்துடன் 2,438 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சைகள் இடம்பெறவுள்ளது.
மேலும் , எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி இடம்பெறவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை அண்மையில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



