இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவி விலகல்.

0

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் தன் பதவி விலகவுள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல தடவைகள் மின்சார சபையின் தலைவராக எம்.எம்.சி. பேர்டினண்டோ , யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டு அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவரின் செயற்பாடு தொடர்பில் மின் பொறியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply