கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு.

0

கிளிநொச்சியில் கடந்த வருடம் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் நிபந்தனைகளை மீறிய விதத்தில் மணல் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் 610 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு கோடியே 98 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டரீதியான மணல் அகழ்வு களை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி பல்வேறு தரப்பினரும் தமது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ச்சியாக காவல் துறையினரால் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply