தென்னிலங்கையில் பாடசாலை மாணவி ஒருவரும் இளைஞர் ஒருவரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில் பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் உயிரிழந்தவர்கள் 16 வயதுடைய பாடசாலை மாணவியும், 20 வயதுடைய இளைஞனும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் இருவருக்கும் காதல் தொடர்பு இருந்ததாக கரந்தெனிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தற்கொலையா அல்லது கொலையா என விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



