சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதற்கு மிக பொருத்தமான ஐந்து நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளது என
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது வெகுவாக அதிகரித்துள்ளதாகவும், இது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாரிய பின்புலமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த சில மாதங்களாக அதிகளவு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு படையெடுத்துள்ளதுடன், தினமும் கிட்டத்தட்ட 3,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், இதற்காக 22 விமான நிறுவனங்கள் தற்போது இயங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ப சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் அறைகளின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



