இந்த நாட்களில் விரதம் இருந்தால் அனைத்து கஷ்டங்களும் நீங்கும்..!

0

அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் அடுத்துவரும் எட்டாவது நாள் அஷ்டமி திதி. இந்த நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் என்பதால், இது ‘அஷ்டமி திதி விரதம்’ என்று அழைக்கப்படுகிறது. அஷ்டமி நாளில் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது என்ற நம்பிக்கை பெரும்பாலும் உண்டு. ஆனால், தீய செயல் செய்பவர்களுக்கே இது பொருந்தும்; நற்செயல் செய்பவர்களுக்குப் பொருந்தாது. அஷ்டமி விரதமானது பைரவருக்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

திருமாலின் அவதாரமான கண்ணன் அஷ்டமி திதியில் பிறந்தவர். அவர் பிறந்த தினம் ‘கோகுலாஷ்டமி’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

வைகாசி ‘அஷ்டமி விரதம்’ சிவனுக்குரிய விரதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடி மாதம் தேய்பிறையில் வரும் அஷ்டமி, தட்சிணாமூர்த்திக்காக மேற்கொள்ளப்படுகிறது. அஷ்டமி திதியில் துர்கைக்கு விரதம் இருந்து வழிபடுவது, உத்தமப் பலன்களைத் தரும். அஷ்டமி விரதம், சகலவிதமான கஷ்டங்களையும் போக்கும்.- Source: Maalaimalar


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

Leave a Reply