டயகம பகுதியில் தொடர் லயன் குடியிருப்பில் தீ பரவல்.

0

டயகம பகுதியில் தொடர் லயன் குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் திடீர் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டயகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட வேவர்லி தோட்டம் ஆடலி பிரிவில் 14 வீடுகளைக் கொண்ட தொடர் லயன் குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் இன்று காலை தீப் பரவல் ஏற்பட்டது.

குறித்த தீப் பரவலினால் வீட்டில் இருந்த பல உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள் போன்ற பெருமளவிலான பொருட்கள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

தீ ஏற்பட்டபோது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து , அயலவர்கள் ஓடிவந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் குறித்த தீ விபத்து தொடர்பில் டயகம காவல் நிலையத்திற்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் பிரதேச மக்களினால் தகவல் வழங்கப்பட்டது.

இதன் பிரகாரம் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீப் பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply