நடிகர் சிம்புவின் அடுத்த பட அப்டேட்.

0

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும்” வெந்து தணிந்தது காடு ” என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

குறித்த படத்தை அடுத்து பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடிக்க இருக்கிறார்.

அத்துடன் அஸ்வத் மாரிமுத்துடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இயக்குனர் அஸ்வத் மாரி முத்து ” ஓ மை கடவுளே ” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதற்கமைய முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்து கோலிவுட்டின் நம்பிக்கைக்குரிய இளம் இயக்குநர்களில் ஒருவராக மாறினார்.

ஆனால் தற்போது அவர் ஓ மை கடவுளே படத்தை தெலுங்கில் இயக்கி வருகின்றார்.

இருப்பினும் குறித்த பாடத்தை அடுத்து சிம்பு உடன் கூட்டணி அமைக்க இருக்கின்றார் அஷ்வத் மாரிமுத்து.

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply