தனுஷ், ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் சண்டை மாத்திரம் தான்- விவாகரத்து இல்லை.

0

தென்னிந்திய திரை உலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான தனுஷ், நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை விட ஒரு வயது மூத்தவர்.

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாகவும் , இன்று முதல் எங்களுடைய பயணம் தனி தனி பாதைகளில் இருக்கும் என அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி தனுசின் தந்தையும், டைரக்டருமான கஸ்தூரிராஜா கூறியதாவது:-

‘‘தனுசும், ஐஸ்வர்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இது, கணவன்-மனைவி இடையே நடக்கும் வழக்கமான குடும்ப சண்டைதான். இருவரும் விவாகரத்து செய்யவில்லை.

இரண்டு பேருமே இப்போது சென்னையில் இல்லை. ஐதராபாத்தில் இருக்கிறார்கள்.

நான் போனில் தொடர்புகொண்டு பேசினேன். இருவருக்கும் சில அறிவுரைகளை சொன்னேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்..

Leave a Reply