நாட்டில் 6 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நீர் கொள்வனவு மேலும் குறையும் சந்தர்ப்பத்தில் 5 முதல் 6 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டை மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின்பொறியியளாலர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மே மாத இறுதிக்குள் நீர்மின் உற்பத்தி போதிய அளவு அதிகரிக்கப்படாவிட்டால், எவ்வளவு காலம் மின்வெட்டு அமலில் இருக்கும் என தெரிவிக்க முடியாது.
மேலும் இலங்கையில் தற்போது தேகைக்கு ஏற்ப மின்சாரத்தை உறுதி செய்ய போதுமான மின் நிலைய வசதிகள் இல்லை எனவும் சங்கத்தின் தலைவர் சௌமிய குமார தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சமயங்களில் அவசரகால கொள்முதலுக்கு மின்சாரம் வழங்கிய தனியார் துறையே தொழில் செய்து கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாக குறிப்பிட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



