தமிழகத்தில் 60 மையங்களில் இன்று பூஸ்டர் போஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்.

0

தமிழகத்தின் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கடந்த 10ஆம் திகதி முதல் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி எனப்படும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்நிலையில் பூஸ்டர் போஸ் போடும் பணி நடைபெற்று வருகிறது.

அத்துடன் 20 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்குள் 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் 600 இடங்களில் ‘பூஸ்டர் டோஸ் ‘ சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

Leave a Reply