தமிழகத்தில் கொவிட் தொற்றின் வீரியம் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் குறித்த தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
அத்துடன் கொவிட் கொவிட் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் பிரகாரம் பணியிடங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதாவது பணியிடங்களில் முக கவசம் அணியாதவர்களை தனியார் நிறுவனங்கள் உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
அத்துடன் அறிகுறிகள் உள்ள பணியாளர்கள் அனைவரும் கொவிட் பரிசோதனையை செய்ய வேண்டும்.
மேலும் 300 பேருக்கு அதிகமாக இருக்கும் தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும்.
அவ்வாறு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



