மனைவியை பிரிந்த முன்னணி நடிகர்.

0

தென்னிந்திய திரை உலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான தனுஷ், நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை விட ஒரு வயது மூத்தவர்.

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் 18 வருடங்களாக நண்பர்,தம்பதி, பெற்றோர் மற்றும் நலம் விரும்பியாக நாங்க இருந்தோம்.

எங்கள் வாழ்க்கை பயணம் பல புரிதல்களோடு நெடுந்தூர பயணமாக இருந்தது.

இந்நிலையில் இன்று முதல் எங்களுடைய பயணம் வெவ்வேறாக இருக்க முடிவு செய்து இருக்கிறோம்.

எங்கள் முடிவுக்கு மரியாதை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம் என பதிவு செய்துள்ளார்.

Leave a Reply