மின்சார உற்பத்திக்கு தேவையான உலை எண்ணைய் இன்றைய தினத்திற்கு மாத்திரமே போதுமானதாக இருப்பதாக மின் பொறியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் சில நாட்களுக்கு தேவையான டீசலை பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிதியமைச்சு மற்றும் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நிறுவனங்கள் சிலவற்றுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



