இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தொடர்பில் வெளியான தகவல்.

0

இலங்கையில் நாளொன்றில் சுமார் 3000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உப்புல் தர்மதாச குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினத்தில் வரை நாட்டுக்கு 46,942 பேர் வருகை தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக 22 வெளிநாட்டு விமான நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

மேலும் பல விமான சேவை நிறுவனங்கள் இலங்கையுடன் விமான சேவை உறவுகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply