தடுப்பூசி தொடர்பில் மத்திய அரசு விடுத்துள்ள தகவல்.

0

உலகளாவிய ரீதியில் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் யாரையும் கொவிட் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி போய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்திய அட்டையை பொதுவிடங்களில் காண்பிக்கும் கட்டாயத்தில் இங்க இருந்து மாற்று திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாற்று திறனாளிகள் தடுப்பூசி செலுத்திய அட்டையை கையோடு எடுத்துச் செல்லுமாறும் எவ்வித உத்தரவும் மத்திய அரசு சார்பில் பிறப்பிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply