16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன..

இந்நிலையில் 16 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் 2ஆம் கொவிட் தடுப்பு ஊசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டு மூன்று மாதங்களை கடந்தவர்களுக்கு, இரண்டாம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும்

மேலும் அதற்கு தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் பேராசிரியர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply