மின்சார சபைக்கு எனி எரிபொருள் வழங்க முடியாது.

0

இலங்கையில் கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக , நாடளாவிய ரீதியில் உள்ள சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது.

இந்நிலையில் அதனை மீளமைப்பதற்காக இரண்டு தடவைகளில் 3,000 மெற்றிக் டன் டீசல் வழங்கப்பட்டதுடன், இனி டொலர்கள் என்றி அவ்வாறு எரிபொருளை வழங்க முடியாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு தேவையான எரிபொருட்கள் கையிருப்பில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கையிருப்பில் உள்ள எரிபொருளை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கினால் வாகனங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply