சதொசவில் மிகக் குறைந்த விலையில் 20 அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

0

அத்தியாவசிய பொருட்கள் உட்பட 20 பொருட்கள் அடங்கிய பொதியை, சதொச விற்பனை மூலம் 3,998 கியூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய சதொச விற்பனை நிலையம் இல்லாத பகுதிகளில் உள்ள மக்கள் 1998 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு தொடர்பு கொள்வதன் மூலம் இந்த பொதியை வீட்டுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சிறப்பு வர்த்தக நிலையங்களில் 6,521 ரூபாவுக்கும், 5,834 ரூபாவுக்கும், 5,771 ரூபாவுக்கும் இந்த பொருட்கள் அடங்கிய பொதி விற்பனை செய்யப்படுகின்றன.

ஆனால் தாங்கள் அதனை 3,998 ரூபாவுக்கு மக்களுக்கு வழங்குவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு பகுதியிலும் நுகர்வோருக்கு ஆக குறைந்தது 1,750 ரூபா லாபம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply