நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அத்துடன் நாட்டில் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அனைவரும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



