யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிடம் ஒன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதற்கமைய குறித்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கோப்பாய் காவல் துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்றைய தினம் இரவு மாணவர்களின் தங்குமிடத்தில் இடம்பெற்ற தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த மோதல் சம்பவம் பதிவாகியுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் , யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர் .



