நாட்டிற்கு தேவையான ஒளடதகங்கள் தொடர்பான அறிக்கையைசமர்ப்பிக்குமாறு பணிப்புரை.

0

நாட்டிற்கு தேவையான ஒளடதகங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை இன்றைய தினம் வழங்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் ஆறு மாத காலப் பகுதிக்காகவே குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த வருடத்தில், நாட்டிற்கு தேவையான விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்த ஆலோசனையை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மூன்று மாதங்கள் என்ற அடிப்படையில் இரண்டு காலப்பகுதிக்கு தேவையான ஒளடதங்கள் குறித்து கணக்கிட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply