கருப்பு பட்டியலில் இருந்து விடுபட்ட இலங்கை மக்கள் வங்கி.

0

சீனாவின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தின் கறுப்பு பட்டியலில் இருந்து இலங்கையின் மக்கள் வங்கி நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதனப் பசளை தரக் குறைவாக இருந்தமையால் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் குறித்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டணத் தொகையை செலுத்துவதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்தது.

இந்நிலையில் இலங்கை மக்கள் வழங்கிய சீன தூதரகம் கறுப்பு பட்டியலில் சேர்த்திருந்தது.

இருப்பினும் இந்த இடைக்கால தடை நீக்கப்பட்டதையடுத்து, கடந்த தினம் 6.8 மில்லியன் டாலர்கள் குறித்த நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டது.

மேலும் மக்கள் வங்கியை சீன தூதரகம் தனது கருப்பு பட்டியலில் இருந்து நீக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply