வீழ்ச்சியை ஏற்றுக்கொண்ட ராஜபக்ச தரப்பு.

0

இலங்கையில் தற்போது நிலவு நெருக்கடிகளால் ஆனால் ராஜபக்ஷ ஆட்சியின் புகழ் வீழ்ச்சி அடைந்துள்ளதை ஏற்றுக்கொள்வதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இது தற்காலிகமானது எற்றும் இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ரசாயன உர பாவனையை தடை செய்வதற்கு அரச தலைவர் கோத்தபாய ராஜபக்ச எடுத்த தீர்மானம் ஒரு வலுவான முடிவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் பொறுப்பான அதிகாரிகளினால் அதை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்த முடியவில்லை.

2019ஆம் ஆண்டு பதவி ஏற்றவுடன் ரசாயன உரத்திற்கு மாற்றுவதற்கான தனது முடிவை அரச தலைவர் அறிவித்துள்ளார்.

ஆனால் அதிகாரிகள் அதனை தொடராத தன்மையால் முடிவே மாறியது.

மேலும் ரசாயன உரத்திற்கு மாற்றுவதற்கான செய்முறை உள்ளது என்பது உண்மைதான்.

அது 10 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட இருக்க வேண்டும் என்பதுடன் இந்த விடயம் தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அசட்டையீனம் செய்தமையால் அரச தலைவர்கள் கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply