நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கீழ் வளிமண்டல தளம்பல் நிலை தொடர்ச்சியாக இலங்கைக்கு தென்கிழக்காக நிலைகொண்டுள்ளது.
இதன் பிரகாரம் 2-வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்ட திலும் அடிக்கடி மழை பெய்யும்.
அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, பொலநறுவை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



