டெல்லியில் கொவிட் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் டெல்லியில் முழு நேர ஊரடங்கு உத்தரவு கிடையாது என அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அத்துடன் டெல்லி காவல் துறையை சேர்ந்த மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் உட்பட 300க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.
டெல்லி காவல்துறை தலைமை அலுவலகம் உட்பட அங்கு உள்ள அனைத்து பிரிவு காவல்துறை நிலையங்களிலும் ஏராளமான காவல் துறை பணியாளர்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



