கொவிட் தொற்றால் இழந்து போன இரண்டு வருடங்களை நீடிக்க பொதுஜன வாக்கெடுப்பை நடத்துமாறு இளைஞர் ஒருவர் தன்னிடம் கூறியதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்த கருத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இதற்கமைய பொதிகையில் வாக்கெடுப்பின் ஊடாக ஆட்சிக் காலத்தில் இலங்கை அரசாங்கம் முயற்சிக்கும் ஆயின் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது.
அத்துடன் மாத்தறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மேளனத்தில் நேற்றைய தினம் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர்,
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட அத்தியவசிய பொருட்களின் விலைகளை காட்டிலும் , 2015ஆம் ஆண்டிற்கு பின்னர் எமது அரசாங்கத்தில் குறைவாக வழங்கினோம்.
உலக அளவில் எரிபொருள் விலை அதிகரித்த போதும் கூட, இரண்டு ரூபாவினால் நாட்டில் எரிபொருள் விலையை குறைத்து வழங்கினோம்.
அந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர்கள் எதிர்த்தனர்.
ஆனால் தற்போது நாட்டில் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
ஆகவே படத்தில் நடிக்க முடியாது என முன்னாள் அரசுத்தலைவர் மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.



