நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கைக்கு தென்கிழக்காக ஒரு கீழ் வளிமண்டல தளம்பல் நிலை விருத்தி அடைந்துள்ளதால் ஜனவரி 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அத்துடன் வடக்கு, வடமத்திய , மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யும்.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தின் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



